Tuesday, 30 August 2011

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை

1801 - மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
1917 - இரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது.
1945 - ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
2003 - கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.2005 - ஆப்ரிக்க அமெரிக்க குடியுரிமைகளுக்காகப் போராடிய ரோசா பார்க்ஸ் (Rosa Parks) காலமானார்.

குறுநில மன்னன் -tamil cinema

மருது பாண்டியருக்கு புகழ்மாலை  
 
மனதளவில் தன்னை ஒரு ராஜாவாக - சுற்றத்தை ரா‌ஜ்‌ஜியமாக நினைத்து வாழும் ஒருவனின் கதை குறுநில மன்னன். கிராமத்து மண் மணம் கமழ படத்தை எடுத்து வருகிறார்கள்.

கிராமம், மண் மணம் என்று கூறிவிட்டு படத்தில் கிராமத்துக்கே உ‌‌ரிய தனித்துவத்தை காண்பிக்காமல் இருந்தால் எப்படி? வட மாடு மஞ்சு விரட்டு, உள்ளபட பல தனித்துவங்கள் முதல் முறையாக திரையில் அரங்கேறவுள்ளது.

படத்தில் கூத்தாடும் கலைஞர் மருது பாண்டியர் கூத்தை நடத்துவதாக ஒரு இடம் வருகிறது. இதற்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார்.

மருதுபாண்டி வீரத்தோட கதையை கொஞ்சம் கேளுங்க
பெ‌ரிய மருது சின்ன மருது அண்ணன் தம்பி தானுங்க
முன்னவரோ வேட்டையிலே வேங்கைப்புலி தானுங்க
பின்னவரோ வேட்டையிலே சூரப்புலி தானுங்கோ...

தேவர்மகனில் வரும் போற்றிப்பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே... தேவர் புகழ் பாடியதோடு தென் தமிழகத்தில் சாதி ‌ரீதியான சண்டைக்கும் வழிகோ‌‌ரியது. அப்படியொரு சூழலை இந்தப் பாடல் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

மருதுபாண்டியன் நினைவிடங்கள்

மருதுபாண்டியன் நினைவிடங்கள்



ம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் கோபுரத்தை உயிரைக் கொடுத்துக் காப்பாற்ற முடியுமா?  நிஜமாகவே காப்பாற்றியிருக்கிறார்கள் மருதுபாண்டிய சகோதரர்கள்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில். அதற்கு நேர் எதிரே ஆத்தா ஊரணிக் கரையில் சின்னக் கோவில். அதில் தலைப்பாகையுடன் கை குவித்தபடி பெரிய மருதுவின் சிலை. கீழே அவரது சமாதி. தோற்றம் 1748, மறைவு 27.10.1801 என்கிற கறுப்புக் கல்வெட்டுக் குறிப்பு. பக்கத்தில் இன்னொரு சமாதி மேடு. அதைச் சின்ன மருதுவின் சமாதி என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
இருநூறு வருஷங்கள் கடந்த பிறகும் இப்போதும் எழுச்சியுடன் நினைவு கூரப்படுகிறது. அவர்களது வீரமும், சொந்த மண் மீது அவர்கள் வைத்திருந்த பிரியமும்.
காளையார்கோவிலே பதட்டத்துடன் இருந்தது. ஊரின் நடுவில் இருந்த காளீஸ்வரர் கோபுரத்தின் மீது ஆங்கிலேயக் கொடி பறந்து கொண்டிருந்தது. கொடி பறந்தாலே கோபுரத்திற்கு ஆபத்து என்பதுதான் ‘சிக்னல்.’ எந்தச் சமயத்திலும் சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்கள் கட்டி குடமுழுக்கு நடத்தி வழிபட்ட அந்தக் கோபுரம் தகர்க்கப்படலாம் என்கிற பீதி. அதற்கு 18 வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தகர்க்கப் போவதாக அறிவிப்பு கொடுத்து நெல்லை பாளையக்காரரைக் கப்பம் கட்டச் செய்திருந்தார்கள். இங்கே திரும்பவும் அதே பாணி; அதே மாதிரி கொடி பறக்கிறது.
அக்னியு என்கிற ஆங்கிலேய அதிகாரிதான் ராணுவ கர்னல். 21 பீரங்கிகள், தளவாடங்களுடன் ஆங்கிலேயப் படை. எதிரே காளையார் கோவில். கோட்டையைச் சுற்றிப் போரிட ஆயத்தத்துடன் 25 ஆயிரம் பேர் கொண்ட மருதிருவர் படை. ‘எந்தச் சமயத்திலும் அசுர பலத்துடன் தாக்கினால் பதிலுக்குக் கோபுரத்தைத் தகர்ப்போம்‘ என்கிற பிடிவாதத்துடன் ஆங்கிலேயப் படை.
போரா? கோபுரமா?
கோவிலைக் காக்கத் தவறியவர்கள் என்கிற அவலமான பெயர் கிடைத்துவிடக் கூடாதே. பதினெட்டு அடி உயரத்துடன் கற்கோட்டையுடன் பலம் பொருந்திய காளையார்கோவிலை விட்டுத் தந்திரமாக வெளியேறினார்கள் மருதுபாண்டியர். அவர்களது படையும் கலைந்தது. அதன் பிறகே தப்பியது கோபுரம். காட்டிற்குள் மறைந்தார்கள் மருது பாண்டியர்கள்.
“மருதுபாண்டியரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பத்தாயிரம் பகோடா அல்லது 4000 பவுண்டு ஸ்டெர்லிங் பணம் வழங்கப்படும்” என்று தண்டோரா போட்டிருந்தார்கள். துவங்கியது வேட்டை. பணத்தாசை காட்டியதும் மருதுபாண்டியரின் உடனிருந்தவர்களே காட்டிக் கொடுத்த பிறகு – ஒவ்வொருவராய் தூக்கிலிடப்பட்டனர்.
வெற்றியூர்க் காட்டில் மறைந்திருந்தபோது சின்னமருதுவைக் காட்டிக் கொடுத்தது உடனிருந்த ஒருத்தன். இதையடுத்துப் பெரியமருதுவையும் பிடிக்கிறார்கள். நேரே திருப்பத்தூர் கோட்டைக்குக் கொண்டுபோய்ச் சிறை வைத்தார்கள். ஆங்கிலேயர் பரம எதிரியாகக் கருதிய சின்னமருதுவுக்கு என்று தனிக் கூண்டு அமைத்து அதோடு தூக்கிலிடப்பட்டார். பெரிய மருதுவையும், அவரோடு 500 படையினரையும் திருப்பத்தூர் தெருவிலேயே தூக்கிலிட்டார்கள். மருதுபாண்டியரின் குடும்பமே தூக்கில் தொங்கிற்று. போராளிகளின் தலைகள் கம்பங்களில் குத்தப்பட்டன.
1801 அக்டோபர் 24 அன்று ஒரே பிணக்குவியல்.அதில் மருது பாண்டியரின் உடல்களைத் தேடியெடுத்துக் காளையார் கோவிலுக்கு மக்களே கொண்டுபோக மூன்று நாட்களாயிற்று.
மருதுபாண்டியர் மிகவும் நேசித்த கோவிலுக்கு எதிரேயே அவர்களைப் புதைத்தனர். சின்னமருதுவின் உடலைக் கொண்டுபோவதைக் கூட ஆங்கிலேய அரசு விரும்பாததால் இப்போதும் கோவில் இல்லாமல் வெட்டவெளியில் இருக்கிறது சின்ன மருதுவின் சமாதி.
மருதுபாண்டியரால் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காளையார் கோவில் ராஜகோபுரத்தின் உயரம் 155 1/2 அடி. ஒன்பது அடுக்குகள் கொண்ட கோபுரத்தின் உச்சிக்குப் போனால் மதுரைக் கோபுரம் தெரியுமாம். கோவிலில் கை குவித்தபடி மருது பாண்டியரின் சிலைகள்.
எதிரே சொர்ண காளீஸ்வரர் சன்னிதியிலிருந்து பார்த்தால் கூப்பிடு தூரத்தில் – தங்கள் மூச்சைக் கொடுத்து கோபுரத்தைக் காப்பாற்றிய அவர்களது சமாதிகள் தரையை ஒட்டியிருக்கலாம்.
ஆனாலும் கோபுரத்திற்கு இணையான உயரத்தில் எப்போதும் வழிபடப்படுகின்றது சிலிர்ப்பூட்டும் அவர்களது விசுவாசம்.

காடுகளை அழித்தால், அடுத்த 10 ஆண்டுகளில்?

வளம் இழந்த வனப்பரப்புகள்' கட்டுரை ஆட்சியாளர் மற்றும் அதிகாரிகளின் அறிவிழந்த செயலைப் படம்பிடித்துக் காட்டியது. மரங்கள் உணவைத் (ஸ்டார்ச்) தயாரிக்க கார்பன்-டை- ஆக்ûஸடை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன.
 மனிதன் உயிர்வாழ ஆக்ஸிஜனை சுவாசித்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ûஸடை வெளியே விடுகிறான். மனித குலத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தாவரங்கள் எவ்வாறு உதவிபுரிகின்றன என்ற அடிப்படைத் தத்துவத்தைக்கூட மறந்து செயல்படும் மனிதர்களை என்னவென்று சொல்லுவது?
 நம்மைப்போல் மக்கள்தொகைப் பெருக்கத்தில் உள்ள சீனா காடுகளைப் பேணுவதில் தலைநிமிர்ந்து நிற்கிறது. இங்கேயோ ""வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்'' என்று மக்களுக்கு அறிவுரை வழங்கிவிட்டு, காட்டிலும் ரோட்டிலும் உள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கும் செயலை எண்ணி வெட்கப்பட வேண்டியிருக்கிறது.
 ஸ்காட்லாந்து நாட்டுப் பாதிரியார் ஒருவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு வந்த போது, ரசிகமணி டி.கே.சி. அவரிடம் ""நாங்கள் மரங்களிடம் அன்பு செலுத்துவதில்லை, ஆனால், பக்தி செலுத்துகிறோம்'' என்று சொல்லி, ஒவ்வொரு கோயிலிலும் தல விருட்சம் என்று ஒரு மரத்தை வைத்து வழிபட்டு வருகிறோம்'' என்றும் சொல்லியுள்ளார்.
 மருது சகோதரர்களின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதியில் ஒரு மருத மரத்தை வெட்டவந்த அரசாங்க அதிகாரிகளிடம், அதை வெட்டவிடாமல் தடுத்தார் ஒரு குடியானவர். மருது சகோதரர்களே நேரில் வந்து அந்தக் குடியானவனிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அந்தக் குடியானவர், ""அந்த மருத மரத்தை வெட்டுவது எங்கள் மன்னரையே வெட்டுவதுபோலத் தோன்றுகிறது'' என்று சொன்னதும் மருது பாண்டியர் பெருமிதம் அடைந்து, "'அந்த மரத்தை வெட்ட வேண்டாம்'' என்று சொன்ன வரலாறு அங்கு உண்டு.
 அடுத்த 10 ஆண்டுகளில் நம் மக்கள் தொகைப் பெருக்கம் எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணி, அதற்கேற்ப இப்பொழுதே காடுகளைப் பெருக்காமல் கட்டடங்களைப் பெருக்கினால், ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக் கொண்டே வாழும் சூழ்நிலை மனிதனுக்கு ஏற்படலாம்!

நாட்டுப்புறப் பாடல்களில் மருது பாண்டியர் வரலாறு:-

சிவகங்கைப் பகுதியில் வழங்கப்படும் கும்மிப் பாடல்களில் மருது பாண்டியர் வீரம், திருப்பணி, அரண்மனை கட்டியமை ஆகிய வரலாற்றுச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எள்ளைக் கழுவி இலையில் இட்டால்
கையில் எடுத்து எண்ணெயாய்த் தான் பிழிஞ்சு
உள்ளம் மகிழ உணவருந்தும் - மன
ஊக்கம் மிகக் கொண்ட பாண்டியனார் - மருதுபாண்டியனார்
என்ற கும்மிப் பாடல் மருது பாண்டியரின் வலிமையை உணர்த்துகிறது.
கருமலையிலே கல்லெடுத்து
காளையார் கொண்டு சேர்த்து
மருதைக் கோபுரம் தெரியக்கட்டிய
மருது வாராரு பாருங்கடி
குலவை போட்டு கும்மி அடியுங்கடி
கூடி நின்று கும்மி கொட்டுங்கடி
என்ற பாடலில் இருந்த கருமலையிலிருந்து கல்லெடுத்து வந்து சிவன் கோயிலை மருது பாண்டியர் கட்டினார் என்ற வரலாறு தெரிய வருகிறது.
செல்வம் மிகுந்த சிறுவயலில் - மன்னன்
சின்ன மருதுக்கு அரண்மனையாம்
சிவகங்கை அரண்மனைக்கு ஒப்பாக
சிறுவயல் தன்னில் மருதிருவர்
நவகோண அரண்மனை ஆசாரம் வாழ்ந்து
நாளும் உள்ளம் மகிழ்திருந்தார்.

Wednesday, 3 August 2011

முக்குலத்தோரை தேவரினமாக அறிவிக்க ஐகோர்ட்டில் வழக்கு

மதுரை : கள்ளர், அகமுடையார், மறவர்களை தேவரினமாக அறிவித்த அரசு உத்தரவை அமல்படுத்தி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கலானது. மதுரை எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல வழக்கு: தமிழகத்தில் முக்குலத்தைச் சேர்ந்த கள்ளர், அகமுடையார், மறவர் என பல்வேறு பிரிவுகளாக இருக்கின்றனர். இவர்கள் தேவர் இனம் என அழைக்கப்படுவர் என்று தமிழக அரசு 1995 செப்., 11ல் உத்தரவிட்டது. ஆனால், உத்தரவை அமல்படுத்தப்படவில்லை. கள்ளர், அகமுடையார் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், பிரமலை கள்ளர், மறவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் உள்ளனர். முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்த அரசு உத்தரவை அமல்படுத்தி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வழக்கு இன்று, நீதிபதிகள் சுகுணா, ஆறுமுகச்சாமி பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.