Tuesday, 30 August 2011

காடுகளை அழித்தால், அடுத்த 10 ஆண்டுகளில்?

வளம் இழந்த வனப்பரப்புகள்' கட்டுரை ஆட்சியாளர் மற்றும் அதிகாரிகளின் அறிவிழந்த செயலைப் படம்பிடித்துக் காட்டியது. மரங்கள் உணவைத் (ஸ்டார்ச்) தயாரிக்க கார்பன்-டை- ஆக்ûஸடை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன.
 மனிதன் உயிர்வாழ ஆக்ஸிஜனை சுவாசித்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ûஸடை வெளியே விடுகிறான். மனித குலத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தாவரங்கள் எவ்வாறு உதவிபுரிகின்றன என்ற அடிப்படைத் தத்துவத்தைக்கூட மறந்து செயல்படும் மனிதர்களை என்னவென்று சொல்லுவது?
 நம்மைப்போல் மக்கள்தொகைப் பெருக்கத்தில் உள்ள சீனா காடுகளைப் பேணுவதில் தலைநிமிர்ந்து நிற்கிறது. இங்கேயோ ""வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்'' என்று மக்களுக்கு அறிவுரை வழங்கிவிட்டு, காட்டிலும் ரோட்டிலும் உள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கும் செயலை எண்ணி வெட்கப்பட வேண்டியிருக்கிறது.
 ஸ்காட்லாந்து நாட்டுப் பாதிரியார் ஒருவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு வந்த போது, ரசிகமணி டி.கே.சி. அவரிடம் ""நாங்கள் மரங்களிடம் அன்பு செலுத்துவதில்லை, ஆனால், பக்தி செலுத்துகிறோம்'' என்று சொல்லி, ஒவ்வொரு கோயிலிலும் தல விருட்சம் என்று ஒரு மரத்தை வைத்து வழிபட்டு வருகிறோம்'' என்றும் சொல்லியுள்ளார்.
 மருது சகோதரர்களின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதியில் ஒரு மருத மரத்தை வெட்டவந்த அரசாங்க அதிகாரிகளிடம், அதை வெட்டவிடாமல் தடுத்தார் ஒரு குடியானவர். மருது சகோதரர்களே நேரில் வந்து அந்தக் குடியானவனிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அந்தக் குடியானவர், ""அந்த மருத மரத்தை வெட்டுவது எங்கள் மன்னரையே வெட்டுவதுபோலத் தோன்றுகிறது'' என்று சொன்னதும் மருது பாண்டியர் பெருமிதம் அடைந்து, "'அந்த மரத்தை வெட்ட வேண்டாம்'' என்று சொன்ன வரலாறு அங்கு உண்டு.
 அடுத்த 10 ஆண்டுகளில் நம் மக்கள் தொகைப் பெருக்கம் எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணி, அதற்கேற்ப இப்பொழுதே காடுகளைப் பெருக்காமல் கட்டடங்களைப் பெருக்கினால், ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக் கொண்டே வாழும் சூழ்நிலை மனிதனுக்கு ஏற்படலாம்!

No comments:

Post a Comment