Wednesday, 3 August 2011

முக்குலத்தோரை தேவரினமாக அறிவிக்க ஐகோர்ட்டில் வழக்கு

மதுரை : கள்ளர், அகமுடையார், மறவர்களை தேவரினமாக அறிவித்த அரசு உத்தரவை அமல்படுத்தி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கலானது. மதுரை எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல வழக்கு: தமிழகத்தில் முக்குலத்தைச் சேர்ந்த கள்ளர், அகமுடையார், மறவர் என பல்வேறு பிரிவுகளாக இருக்கின்றனர். இவர்கள் தேவர் இனம் என அழைக்கப்படுவர் என்று தமிழக அரசு 1995 செப்., 11ல் உத்தரவிட்டது. ஆனால், உத்தரவை அமல்படுத்தப்படவில்லை. கள்ளர், அகமுடையார் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், பிரமலை கள்ளர், மறவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் உள்ளனர். முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்த அரசு உத்தரவை அமல்படுத்தி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வழக்கு இன்று, நீதிபதிகள் சுகுணா, ஆறுமுகச்சாமி பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment